ஆசையில் ஓர் கடிதம்-6
அன்புள்ள ராம்
பட்டாம்பூச்சி பிடித்திருக்கிறாயா? தட்டான் பின்னால் ஓடியிருக்கிறாயா?
தொட்டாசிணுங்கியை வருடிக் கொடுத்து உறங்க வைத்திருக்கிறாயா?
ஆம் என்றாலும் இல்லை என்றாலும் எனக்காக கொஞ்சம் வருகிறாயா?
கைவசம் கப்பல் ஒன்று வைத்திருக்கிறேன். காகிதத்தால் செய்தது. அதில் ஏறி பூக்களை ரசித்தபடியே மேக தேசம் போவோம். அங்கிருந்து நிலவுக்கு போய், பின் நட்சத்திரம் பறிப்போம். விண்வெளியில் சிறிதாய் வீடு கட்டி வசிப்போம்.
இருந்த இடத்தில் இருந்த படியே விண்வெளிக்கு பயணிக்க உன்னால் மட்டுமே முடிகிறது என்று கேலி செய்வாய்.
உன் அருகாமை என்னை அண்டம் தாண்டி அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டது என்பதை அறிவாயா?
சரி விடு. தூக்கணாங்குருவியின் கூட்டை வைத்தே பருவ மழையை கணிக்க முடியுமாம். விண்வெளி எல்லாம் எதற்கு? நீயும் நானும் சேர்ந்து வசிக்க தூக்கணாங்குருவியிடம் கூடு கட்டி கேட்போமா?
அடுத்த மழைக்குள் கடிதம் அனுப்பு.
இப்படிக்கு
உன் ❤️
6.12.2022
இரவு 7.55
