Nithya's FM

ஆசையில் ஓர் கடிதம் – 1

அன்புள்ள ராம்
எங்கிருக்கிறாய் நீ? வேற்று நாட்டு சிறைக் கூடத்திலா, இல்லை, சிறை வைக்க நினைக்கும் என் மனக்கூடத்திலா? உனக்கு தெரியுமா, கழுத்தை நெரிக்கும் பிசாசுகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கிறேன். அண்ணார்ந்து பார்த்தால் நிலவோ நட்சத்திரமோ தெரிந்தால் பெரும் ஆசுவாசமாக இருக்கும். ஆனால் எனக்கோ பேரிருள் ஒன்று தென்படுகிறது. ஆம், நீ நினைக்கக் கூடும், இதைவிட பேரிருளைக் கூட வெறும் மின்மினி வெளிச்சத்தில் கடந்து வந்தவள் தானே, இந்த இருள் எம்மாத்திரம் என்று. ஆனால் நீ தானே நிகழ்காலத்தில் நடக்கும்படி சொல்லியிருந்தாய். இப்போது நிகழ்காலத்தில் தான் இருக்கிறேன். காரிருள் அச்சமூட்டுகிறது. எனக்கு மின்மினியே காதல் தான் என்பது உனக்கு தெரியாதா? காதலான நீயோ கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கோ மறைந்து நிற்கிறாய். நிலவாகவோ நட்சத்திரமாகவோ  மின்மினியாகவோ எனக்காக எனக்கே எனக்காக என் முன் வரக்கூடாதா. அப்படி என்ன தவறிழைத்தேன். நேசித்ததா?
எனக்கு பிசாசுகளைக் கண்டு அச்சம் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் நீ மட்டுமே என் ஆகப் பெரும் தைரியம். வர முடியுமா எனக்காக, இல்லை, பரவாயில்லை வர இயலாவிட்டால், காதலோடு ஒரு கடிதம் ஒரே ஒரு கடிதம் மட்டுமேனும் எனக்காக அனுப்ப முடியுமா? 
பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு உன்