Nithya's FM

ஆசையில் ஓர் கடிதம் – 2

அன்புள்ள ராம்

உனக்கு நினைவிருக்கிறதா? அன்றொருநாள் என்னிடம் உனக்கு பிடித்தவற்றைக் கூறு என்றாய். நானோ பலூன், நீர்க்குமிழி, பூக்கள் கருவாடு என்றேன். சிரித்து விட்டாய். ஏன் சிரிக்கிறாய் என்றேன். உனக்கு பிடித்தவற்றை கவனித்தாயா, எல்லாம் உன் மனது போல் இலகுவாக இருக்கே என்றாய். ஆனால் இன்றோ கனமானவற்றை எதிர் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறேன். உனக்கு தெரியாதா, கதை சொல், கவிதை சொல் என்றால் மணிக்கணக்காய் பேசத் தெரிந்தவள் தான். ஆனால் வார்த்தையை வாளாக்கி தாக்குதல் நடத்துவதில் தேர்ந்தவள் இல்லை.பேசாமல்
காதுகளில் கேடயம் மாட்டிக் கொள்ளவா?
யுத்தம் உனக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். என் புழுதி படிந்த போர்க்களத்தில் பூத்திருக்கும் ஒற்றை பூ நீ என ஒரு முறை என்னிடம் நீ சொன்னது நினைவுக்கு வருகிறது. புரிகிறது. களத்தில் உனக்கான ஆசுவாசம் நான். ஆனால் எனக்கோ நித்தமும்
கத்தியும் கேடயமும் வெறுப்பூட்டும் வலியாக மாறி இருக்கிறது. என்னை வேரோடு பிடுங்கி பூக்கள் இருக்கும் தேசத்திற்கு இடம் பெயர்க்க முடியுமா?

உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

இப்படிக்கு
உன்