Nithya's FM

ஆசையில் ஓர் கடிதம் – 3

அன்புள்ள ராம்,
வரலாற்றில் ஜாலியன்வாலா பாக்  பற்றி  படித்திருக்கிறோமே, நினைவிருக்கிறதா? ஆம் அது போன்றதோர் பெரும் களத்தில், வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டு, எல்லா புறத்தில் இருந்தும் பெரும் தாக்குதலுக்குஉள்ளாகி இருந்தேன்.தப்பிக்க வழி தெரியாமல், அங்கிருக்கும் கிணற்றில் குதித்து விட்டேன். கிணற்றுக்குள் வெடிகுண்டுகள் வீசப்படலாம். ஆனாலும் எனக்கு கொஞ்சம் தைரியம் தான். கிணற்றுக்குள் இருக்கும் சுரங்கப் பாதையின் வழி உனக்கு தெரியும் தானே? சுரங்க வழி இருள் சூழ்ந்திருக்கும் பரவாயில்லையா என்கிறாய். உன் கைகள் பற்றி நடக்கும் போது இருள் எப்படி நெருங்கும்?

உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு கூடை நிறைய பூக்களும் ஒரு கூடை நிறைய பொன்னும் இருந்தால் எதை தேர்ந்தெடுப்பாய் என்றாய். நான் புன்னகைத்தேன். நீ பூக்களை பரிசளித்தாய். ஆம் உனக்கு மட்டுமே என்னை புரியும்.
ஒரு கூடை நிறைய பூக்கள் ஒரு புறமும், உன் உள்ளங்கை ஒரு  புறமும் இருந்தால், நான் உன் கைகளைத் தானே பற்றிக் கொள்வேன். 
கை பிடித்து அழைத்துச் செல்ல வருவாய் தானே?
காத்திருக்கிறேன்.
இப்படிக்கு உன்

27.11.2022 நள்ளிரவு 12.21