Nithya's FM

ஆசையில் ஓர் கடிதம்- 5

அன்புள்ள ராம்
உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு நாள் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன், இரத்தம் வழிய நின்றிருந்தேன். என் கையில் கேடயம் மட்டுமே இருந்தது. நான் கொடுத்த வாள் எங்கே என்றாய். வீசி எறிந்துவிட்டேன் என்றேன். பைத்தியமா நீ என்றாய். ஆம் பைத்தியம் தான். நீ கொடுத்த வாளால் எதிரி நாட்டு படை வீரன் ஒருவனை தாக்கினேன். அவன் மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. அடிபட்டவன் அழுவதும் கதறுவதும் இயல்பு தான். அடித்தவள் கதறி கண்டதுண்டா? அன்று நீ என்னை பார்த்திருக்க வேண்டும். அய்யோ இரத்தம் வருதே என்று அந்த எதிரியின் காயத்திற்கு மருந்து தேடி ஓடினேன். கையில் வாள் இருந்தால் தானே தாக்க தோன்றும். பின்னர் அழவும் தோன்றும்அது தேவையில்லை என்று தான் வாளை வீசி எறிந்தேன். இதோ விளைவு இது தான் என்று என் உடலின் இரத்தக் காயங்களை காட்டினேன். நீயோ தலையில் அடித்துக் கொண்டாய்.
நீ இந்த பணிக்கு தகுதி இல்லாதவள் என்று தோழர் ஒருவர் சொல்லிச் சென்றார். அவர் சொன்னது தவறு. நான் இந்த பணிக்கு அல்ல இந்த உலகிற்கே தகுதி இல்லாதவள்.
என்னை நாடு கடத்துவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. பிரபஞ்ச வெளிக்கு கொண்டு சென்று, என்னை அங்கேயே தொலைத்து விடு.
இப்படிக்கு

உன்