Category: ஆசையில் ஓர் கடிதம்

ஆசையில் ஓர் கடிதம் – 10

அன்புள்ள ராம், சொல்லியிருக்கிறேனா? கொரோனா முதல் லாக்டவுனிற்கு முந்தைய நாளில், ரயில் நிலைய நடைமேடை கூரையில் காகம் ஒன்றைக் கண்டேன். அதன் கால்கள் ஏதோ கம்பியில் சிக்கியிருந்தன. யாராவது காப்பாற்றுங்கள் என்று நம்பிக்கையோடு கரைந்தது. யாராவது காப்பாற்றுவார்கள் என்று நானும் கண்டும் காணாமல் ரயிலேறி கடந்தேன். லாக்டவுன்...

ஆசையில் ஓர் கடிதம் – 9

அன்புள்ள ராம், இணையத்தில் கதை ஒன்று வாசித்தேன். நண்பர்கள் இருவர் பாலைவனத்தில் நடந்து சென்றார்களாம். நடந்து களைத்து பசியும் தாகமும் மேலிட, தூரத்தில் மதில் சுவர் ஒன்று தெரிந்ததாம். மதிலுக்கு அப்பால் சோலை இருப்பதும் தெரிந்ததாம். முதல் நண்பன் மதில் கடந்து சோலைக்குள் மறைந்தானாம். இரண்டாம் நண்பனோ,...

ஆசையில் ஓர் கடிதம் – 8

அன்புள்ள ராம்ஒரு கதை சொல்லவா?பெருங்கொன்றை மரம் ஒன்றில் மஞ்சள் நிறப் பறவை ஒன்றும் பச்சைக்கிளி ஒன்றும் வாழ்ந்து வந்ததாம். ஒரு கோடையில் மஞ்சளாய் பூத்து நின்றது கொன்றை. அந்த மலர்கள் தன் நிறத்தில் இருந்ததால், மரம் எனது என்றதாம் மஞ்சள் பறவை. ஏன் இலைகள் முழுதும் பச்சை...

ஆசையில் ஓர் கடிதம்- 7

அன்புள்ள ராம் உன்னிடம் சொல்லியிருக்கிறேனா? அப்போது பன்னிரெண்டு வயது இருக்கும். பள்ளியில் வைத்து கடுமையான வயிற்று வலி. அன்றைய வகுப்பு தேர்வுக்கு பயந்து நான் நடிப்பதாக சக மாணவிகள் சொல்லிக் கொண்டனர். ஆசிரியரிடம் வயிற்று வலி என்ற போது படுத்துக் கொள் என்றார். இல்லை தேர்வு முடித்து...

ஆசையில் ஓர் கடிதம்-6

அன்புள்ள ராம் பட்டாம்பூச்சி பிடித்திருக்கிறாயா? தட்டான் பின்னால் ஓடியிருக்கிறாயா?தொட்டாசிணுங்கியை வருடிக் கொடுத்து உறங்க வைத்திருக்கிறாயா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் எனக்காக கொஞ்சம் வருகிறாயா?கைவசம் கப்பல் ஒன்று வைத்திருக்கிறேன். காகிதத்தால் செய்தது. அதில் ஏறி பூக்களை ரசித்தபடியே மேக தேசம் போவோம். அங்கிருந்து நிலவுக்கு போய், பின்...

ஆசையில் ஓர் கடிதம்- 5

அன்புள்ள ராம்உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு நாள் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன், இரத்தம் வழிய நின்றிருந்தேன். என் கையில் கேடயம் மட்டுமே இருந்தது. நான் கொடுத்த வாள் எங்கே என்றாய். வீசி எறிந்துவிட்டேன் என்றேன். பைத்தியமா நீ என்றாய். ஆம் பைத்தியம் தான். நீ கொடுத்த வாளால்...

ஆசையில் ஓர் கடிதம் – 4

அன்புள்ள ராம்என் கடிதங்களுக்கு காத்திருக்கிறாய் என்று நம்புகிறேன்.இருந்து இல்லாமல் போனவர்களுக்கு நீ கடிதம் எழுதிய துண்டா? நான் எழுதியிருக்கிறேன். இறந்தவர்களின் சாயலை இருப்பவர்களிடம் தேடித் தேடி தொலைந்ததுண்டா? நான் தொலைந்திருக்கிறேன்.எனது பதினைந்து வயதில், புற்று நோய் காவு வாங்கிய அண்ணன் ஒருவனுக்கு நான் எழுதி தீர்த்த கடிதங்கள் பற்றி...

ஆசையில் ஓர் கடிதம் – 3

அன்புள்ள ராம்,வரலாற்றில் ஜாலியன்வாலா பாக்  பற்றி  படித்திருக்கிறோமே, நினைவிருக்கிறதா? ஆம் அது போன்றதோர் பெரும் களத்தில், வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டு, எல்லா புறத்தில் இருந்தும் பெரும் தாக்குதலுக்குஉள்ளாகி இருந்தேன்.தப்பிக்க வழி தெரியாமல், அங்கிருக்கும் கிணற்றில் குதித்து விட்டேன். கிணற்றுக்குள் வெடிகுண்டுகள் வீசப்படலாம். ஆனாலும் எனக்கு கொஞ்சம் தைரியம்...

ஆசையில் ஓர் கடிதம் – 2

அன்புள்ள ராம் உனக்கு நினைவிருக்கிறதா? அன்றொருநாள் என்னிடம் உனக்கு பிடித்தவற்றைக் கூறு என்றாய். நானோ பலூன், நீர்க்குமிழி, பூக்கள் கருவாடு என்றேன். சிரித்து விட்டாய். ஏன் சிரிக்கிறாய் என்றேன். உனக்கு பிடித்தவற்றை கவனித்தாயா, எல்லாம் உன் மனது போல் இலகுவாக இருக்கே என்றாய். ஆனால் இன்றோ கனமானவற்றை...

ஆசையில் ஓர் கடிதம் – 1

அன்புள்ள ராம்எங்கிருக்கிறாய் நீ? வேற்று நாட்டு சிறைக் கூடத்திலா, இல்லை, சிறை வைக்க நினைக்கும் என் மனக்கூடத்திலா? உனக்கு தெரியுமா, கழுத்தை நெரிக்கும் பிசாசுகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கிறேன். அண்ணார்ந்து பார்த்தால் நிலவோ நட்சத்திரமோ தெரிந்தால் பெரும் ஆசுவாசமாக இருக்கும். ஆனால் எனக்கோ பேரிருள் ஒன்று தென்படுகிறது. ஆம்,...