போ சிரித்து விட்டு போ
மழையில் நனைய விடாமல்
குடை தடுத்தது
உன் கேலி சிரிப்பை பொறுக்க முடியாமல்
மனசு தவித்தது
எதிர்காற்றில் குடையை பறக்க விட்டு விட்டு
மழையில் கொஞ்சம் நனைந்து கொள்கிறேன்
உன் சிரிப்பு மழையிலும் தான் …
உனக்கென்ன சிரிக்க வேண்டும்
அவ்வளவு தானே
போ சிரித்து விட்டு போ

